இடுகைகள்

மன்றல் -சிறுகதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மன்றல்

                         மன்றல் கண்ணாடி முன் நின்று புடவையை சரி பார்த்துக் கொண்டிருந்தாள் மிருணாளினி.. சற்றே பூசிய உடல்வாகு கொண்டவளுக்கு அந்த பட்டுப் புடவை இன்னும் கொஞ்சம் குண்டாக காட்டியது போல் தான் தெரிந்தது.. லேசாய் திரும்பி கண்ணாடியில் பார்க்க முதுகு வரை மட்டுமே வளர்ந்திருந்த முடியை முழுதும் மறைத்திருந்த மல்லிகைப் பூவில் கொஞ்சம் திருப்தியாக இருந்தது. நெற்றியில் கல்வைத்த பொட்டிற்கு மேல் வைத்த குங்குமம் அவளது மை நிற முகத்தில் எடுப்பாக தெரிந்தது.. பின்னலில் சூடியிருந்த பூவில் கொஞ்சத்தை எடுத்து முன்புறம் போட்டுக்கொண்டு கண்ணாடியைப் பார்த்து திருப்தியாய் புன்னகைத்துக் கொண்டாள்.. முப்பது வயதான மிருணாவிற்கு கடந்த ஐந்து வருட பெண் பார்க்கும் படலத்தில் இல்லாத சந்தோசம் இன்றைய நிகழ்வில் இருந்தது.. காரணம் இவள் புகைப்படத்தை பார்த்ததுமே தன் பிடித்தத்தை சொல்லி விட்ட அரவிந்தனால்.. எத்தனையோ வரன்கள் இவள் நிறத்தையும் உடல் பருமனையும் வைத்து நிராகரித்து செல்ல, இந்த அரவிந்தன் அவளுக்கு தேவ தூதன் போல் தான் தெரிந்தான்.. தன்னை பற்றிய தாழ்வு ...