யாருமில்லா தனியரங்கில் -8
அத்தியாயம் -8 நிலாவிடமிருந்து தான் விலகி விட்டோம் என்று நினைத்து வருந்தினான் அபிமன்யு. இந்த இடைவெளியை சரி செய்ய எங்கேயாவது வெளியில் அழைத்துச் சென்று பேசவேண்டும் என எண்ணி கைபேசியில் அவளுக்கு அழைத்தான். சில நேரங்கள் கழித்து அழைப்பு ஏற்கப்பட, "டி குட்ட மூன் எங்கயாச்சும் வெளியே போய்ட்டு வரலாமா? ஃப்ரெண்ட்ஷிப் டே செலிபிரேட் பண்ண சிவா தியேட்டர் போலாமா?"என்று எடுத்த எடுப்பில் அபி கேட்க,பதிலாக வந்த " எப்படி இருக்க அபி? "என்ற மொழியின் குரலில் அப்படியே சமைந்து விட்டான். பதில் பேச வார்த்தைகள் வெளி வர மறுத்து இதழ்களுக்குள் பதுங்கி கிடக்க, நெஞ்சுக்கூட்டுக்குள் பொதிந்து கிடந்த இதயத்தின் தாளம் தப்பி ஒலிக்க ஆரம்பித்தது.எத்தனை நாட்கள் கழித்து அவள் குரலைக் கேட்கிறான். அக்கறையும் மென்மையுமாய் அவள் குரல் அவனை நெகிழ்த்து உயிர் தீண்டியது. இடைவெளியின் இளைப்பாறல்களை அவள் கரங்களுக்குள் இறக்கி விட தவித்தது அவனுள்ளம். 'அணுவுக்கும் இடமில்லா ஆலிங்கனம் அவளோடு இந்த கணமே வேண்டுமே 'அடம் பிடித்தது அவன் உணர்வுகள். "ஹலோ அபி.. லைன்ல இருக்கியா?" இவனின் அமைதியில் அவள் கேட்க அவன் இதழசைத்...