இடுகைகள்

யாருமில்லா 1 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாருமில்லா தனியரங்கில் -1

 அத்தியாயம் 1 வெளிச்சப் புள்ளிகள் தீற்றுக் கீரலை விதைக்கத் துவங்கியிருந்த காலை நேரம். மஞ்சளும் ஆரஞ்சுமாய் ஆதவன் கிழக்கு வானில் கொலு வைக்க, எதிர்த்த வீட்டு கூண்டிற்குள் சிறகை படபடவென அடித்து வழமை அலாரத்தை தெருவெங்கும் சிதறடித்தது சேவல் ஒன்று. நீண்டு விரிந்திரிந்த அந்த தெருவில் ஒரிரண்டு வீடுகளில் வெளிச்சங்கள் வீதியில் தெறிக்க, சலப் சலப்பென வாசல் தெளிக்கும் சத்தம் ஒருவித ரிதத்தை தந்தது மென்மொழிக்கு. கலைந்திருந்த முடியை கொண்டையிட்டு, அணிந்திருந்த நைட்டியை சற்று எற்றி சொறிகிய பின் இரும்பு கேட்டை திறந்தவள், உள்ளிருந்த ஹோஸ் பைப்பை கொண்டு வாசலில் நீர் தெளித்தாள். முன்பெல்லாம் வாலியில் தெளிப்பது தான் வழக்கமென்றாலும், அதிக எடை தூக்க  வேண்டாமென டாக்டர் சொன்னதின் பேரில் இவள் வேலையை இலகுவாக்கிக் கொண்டது. வாசல் தெளித்த பின் ஹோஸ் பைப்பை அருகிலிருந்த மகிழ மரத்தடியில் போட்டுவிட்டு உள்ளே சென்று பைப்பை மூடிவிட்டு வர, பக்கத்து வீட்டு வாசலில் அரவம் கேட்கவும் திரும்பி பார்த்தவள் அங்கு நின்றிருந்த தாமரையைப் பார்த்து சின்னதாய் சிரித்து வைத்தாள். பதிலுக்கு அவரோ முறைத்து வைத்தார். மென்மொழி அதை கண்டு கொ...