இடுகைகள்

யாருமில்லா தனியரங்கில் -9

படம்
அத்தியாயம் -9 முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… மனதோரம் ஒரு காயம்… உன்னை எண்ணாத நாள் இல்லையே… நானாக நானும் இல்லையே… வழி எங்கும் பல பிம்பம்… அதில் நான் சாய தோள் இல்லையே… உன் போல யாரும் இல்லையே… பாடல் காரில் இசைத்துக் கொண்டிருக்க அதனோடு சேர்ந்து பாடிக் கொண்டிருந்தனர் அருணும் நிலாவும். பாடல் வரிகள் என்னவோ அவனுக்கென்றே எழுதி வைத்தது போலிருந்தது அபிமன்யுவிற்கு. அவனும் மெல்ல இதழ்களுக்குள் வார்த்தைகளை ரசித்து முனுமுனுத்துக் கொண்டிருந்தான். அருண் அபி பக்கத்தில் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க பின்னால் நிலாவின் மடியில் ஆரலி அமர்ந்திருக்க மொழியின் மடியில் கவின் அமர்ந்திருந்தான். முன்புறக் கண்ணாடியில் தெரிந்த மொழியின் முகத்தை அவ்வப்போது பார்த்தவாறே இதழைசைத்துக் கொண்டிருந்தான். தூர தேசத்தில்… தொலைந்தாயோ கண்மணி… உனை தேடி கண்டதும்… என் கண்ணெல்லாம் மின்மினி… பின்னோக்கி காலம் போகும் எனில்… உன் மன்னிப்பை கூறுவேன்… கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்… பிழை எல்லாமே கலைவேன்… பின்பாதி வரிகளை மொழியை பார்த்தவாறே சற்று சத்தமாக பாட, அதுவரை வெளியே வேடிக்கை பார்த்துக...

யாருமில்லா தனியரங்கில் -8

அத்தியாயம் -8 நிலாவிடமிருந்து தான் விலகி விட்டோம் என்று நினைத்து வருந்தினான் அபிமன்யு. இந்த இடைவெளியை சரி செய்ய எங்கேயாவது வெளியில் அழைத்துச் சென்று பேசவேண்டும் என எண்ணி கைபேசியில் அவளுக்கு அழைத்தான். சில நேரங்கள் கழித்து அழைப்பு ஏற்கப்பட, "டி குட்ட மூன் எங்கயாச்சும் வெளியே போய்ட்டு வரலாமா? ஃப்ரெண்ட்ஷிப் டே செலிபிரேட் பண்ண சிவா தியேட்டர் போலாமா?"என்று எடுத்த எடுப்பில் அபி கேட்க,பதிலாக வந்த  " எப்படி இருக்க அபி? "என்ற மொழியின் குரலில் அப்படியே சமைந்து விட்டான். பதில் பேச வார்த்தைகள் வெளி வர மறுத்து இதழ்களுக்குள் பதுங்கி கிடக்க, நெஞ்சுக்கூட்டுக்குள் பொதிந்து கிடந்த இதயத்தின் தாளம் தப்பி ஒலிக்க ஆரம்பித்தது.எத்தனை நாட்கள் கழித்து அவள் குரலைக் கேட்கிறான். அக்கறையும் மென்மையுமாய் அவள் குரல் அவனை நெகிழ்த்து உயிர் தீண்டியது. இடைவெளியின் இளைப்பாறல்களை அவள் கரங்களுக்குள் இறக்கி விட தவித்தது அவனுள்ளம். 'அணுவுக்கும் இடமில்லா ஆலிங்கனம் அவளோடு இந்த கணமே வேண்டுமே 'அடம் பிடித்தது அவன் உணர்வுகள். "ஹலோ அபி.. லைன்ல இருக்கியா?" இவனின் அமைதியில் அவள் கேட்க அவன் இதழசைத்...

யாருமில்லா தனியரங்கில் -7

அத்தியாயம் -7 அபிமன்யு வந்த மறுநாள் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை. உலக நண்பர்கள் தினம். காலையில் எழுந்த அபிமன்யு வெகு ஆவலாய் வாட்சப் ஸ்டேட்டஸ் பார்க்க முகம் பியூஸ் போன பல்பானது.அவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஞாபகம் வந்து போனது. வெண்ணிலா வீதியுலா நடத்தும் இரவின் நிறைவிற்கு பின் வெண்கதிரோன் வீர உலா நிகழும் பகல் பிறந்து இரண்டு மணி நேரம் கடந்த நிலையிலும் படுக்கையை விட்டு நகராமல் சோம்பலாய் கைபேசியை நோட்ட மிட்டுக் கொண்டிருந்த அபிமன்யு சட்டென எழுந்து அமர்ந்தான். அதுவரை அமைதியாய் இருந்த அவனது கைபேசி அவன் சத்தத்தை கூட்டி வைத்ததில் அலறிக்கொண்டு பாடியது. ‘நட்புதான் சொத்து நமக்கு.......... நட்பு தான் சொத்து நமக்கு...........’ என் நண்பன் போட்ட சோறு.... நிதமும் தின்னேன் பாரு.....’ நட்பின் வலிமையை முழங்கும் விதமாய் பாடல் வரிகளும் அதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களுமாய் வாட்சப் ஸ்டேட்டஸில் ஓடிக்கொண்டிருந்து. “அச்சோ மச்சி பிச்சுட்டாளே!” என்று வாய் விட்டே சொன்னவன் உடனடி செயலாய் அவள் எண்ணிற்கு அழைத்தான்.சில நிமிட காத்திருப்பிற்கு பின் அழைப்பு ஏற்கப்பட எதிற்முனையின் ...

யாருமில்லா தனியரங்கில் -6

 அத்தியாயம் 6 நிலா கேட்ட கேள்வியில் முதலில் திகைத்தாலும் விரைவில் தன்னை சுதாரித்துக் கொண்ட அபிமன்யு, “உன் கூட இருக்க வரைக்கும் அப்பிடி எந்த ஒரு நல்ல விஷயமும் எனக்கு நடக்காது நிலா “என்று சொல்ல,அவள் கடுப்பாகி “இல்லைனா மட்டும் சார் அப்பிடியே நாலு ஃபிகர லவ் பண்ணி நாப்பது நாள் டேட்டிங் போயிருப்ப.”என்க “ஒத்த ஃபிகருக்கு வக்கத்து கிடக்குறேன். இதுல நாலு ஃபிகாரம்.நாப்பது டேட்டிங்காம். நடக்குற கதையா இது. நானே பேசாம கைலாசா போயிரலாம்னு நினைச்சுட்டு இருக்கேன் “ “மொத அத செய் “என்றிருந்தாள். ‘இவள என்ன சொல்லி அனுப்பினா, என்ன பண்ணிட்டு இருக்கா… சிங்காரி’என பல்லைக் கடித்தான் அன்புச் செழியன். பின் கடுப்புடன் உள்ளே சென்றான். “டேய் அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணிட்டு வந்துட்டு தூங்காம என்ன வெட்டி அரட்ட அடிச்சிட்டு இருக்க “என்று அபியை கடிந்து விட்டு, “நீ கிளம்பலையா இன்னும் “என்று நிலாவிடம் எகிற, “நீங்க தான மாமா..”என்று அவள் ஆரம்பிக்கும் போதே அவள் தலையில் கொட்டி, “எந்திரிச்சி போடி “என்று அவளை விரட்டினான். ‘இவரே பேச சொல்லிட்டு இப்ப வந்து விரட்டுறத பாரு பிஎம்’ வலித்த தலையை தேய்த்துக் கொண்டே அன்புவை முறைத்து விட...

யாருமில்லா தனியரங்கில் -5

 அத்தியாயம் -5 கண்ணாடியில் தெரிந்த வினோத்தின் அருவத்தைக் கண்டு திடுக்கிட்டான் அபிமன்யு. நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. மெல்ல திரும்பி பார்க்க அவ்விடம் வெறுமையாக இருந்தது.சுவரின் அருகில் சென்றான். கைகளால் காற்றில் தடவினான். எதையாவது உணர முடிகிறதா என்று கூர்ந்து கவனித்தான். அப்படி எதுவுமில்லை என்று தோன்றவும் பிரம்மை என்று நினைத்துக் கொண்டு கொஞ்சமாய் ஆசுவாசமானான்.லேசாய் தலை வலிப்பது போல் இருந்தது. சிறிது தூங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவன் உடை மாற்றிக் கொண்டு படுத்து விட்டான். சிறிது நேரத்திலேயே தூங்கியும் போனான். அவன் படுத்திருந்த மெத்தையின் மறுபக்கத்தில் இருந்த போர்வையில் சிறிதாய் வண்ண ஓவியமோன்று தோன்ற ஆரம்பித்தது. அது வினோத்தின் உருவத்தை கொண்டிருந்தது. சட்டென மேல் எழுந்த வினோத்தின் உருவம் அபியின் மேல் படர ஆரம்பித்தது. அந்த அறை முழுவதும் மகிழம்பூவின் மனம் நிறைந்திருந்தது. அப்போது கதவைத் திறந்து கொண்டு வந்தாள் நிலா. அபி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்த நிலா குளியலறைக்குச் சென்று வாளியில் நீரை எடுத்து வந்தவள் அப்பிடியே அதை அவன் மீது கவிழ்த்து விட்டாள். ஈரத்தில் நன...

யாருமில்லா தனியரங்கில் -4

 அத்தியாயம் 4 மின்னும் ஒளிச்சுடர்களின் ராஜாங்கம், ஜொலித்திடும் வெளிச்சப் பூவாய் இரவு நேர நியூயார்க் நகரம் மின் தாரகையாய் மின்னிட, அந்த வெளிச்சத்தை பிரதிபலித்தவனின் கண்களில் மருந்துக்கும் மலர்ச்சியில்லை. மன மகிழ்ச்சியின் பிரதி பிம்பம் அவன் கண்களில் தென்படவில்லை. மாறாக தூரத்து இருளில் தொலைந்த போன அவன் மனதையும் தொலைய செய்த அவளையும் தேடி பிடித்திடும் நோக்கமின்றியொரு அசுர பயத்தில் வீழ்ந்து கொண்டிருந்தது அபிமன்யுவின் மனம். இரண்டு வருடங்களுக்கு முன்னான அந்த நிகழ்வு அவன் மனதை மட்டுமல்ல, அவனையே உலுக்கியெடுத்து போயிருந்தது.இறுக கண்களை மூடிக் கொண்டிருந்தவனில் மின்னி மறைந்தது அந்த காட்சி. அவன் வழியாய் மென்மொழியை நெருங்கியிருந்த வினோத்தின் செயல். ஒரு செயல் கொல்லும் வலியை குடுக்க முடியுமென அவன் அப்போது தான் உணர்ந்தான். அந்தக் உயிர் கொய்யும் வேதனையினூடே அவன் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் தான் காதல். மென்மொழியின் மீது அவன் கொண்ட அபரிமிதமான நேசம்.. தன்னுயிர் காதலியை ஒருத்தன் பார்த்தாலே பத்தியெரியும்.. அப்படியிருக்கும் போது அவனது உடலை கருவியாக உபயோகித்த வினோத்தால் துவண்டு போனான் அபிமன்யு. வினோத் மென்மொழ...

யாருமில்லா தனியரங்கில் -3

 அத்தியாயம் 3 வெயில் மண்டையை பிளந்தது அபிமன்யுவிற்கு. தங்கள் உணவகத்தின் பின் பகுதியில் அந்த வாரத்திற்கான மளிகை சாமான்கள் இறங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. “தம்பி கொஞ்சம் வீடு வரைக்கும் போய்ட்டு வரியா.. உங்க அப்பத்தா வெத்தல தீந்திருச்சுன்னு காலைலயே சொல்லி விட்டுச்சு.. மதியம் சாப்பிட போகும்போது கொடுக்கலாம்னு வச்சிருந்தேன். அதுக்குள்ள வேற வேல வந்துருச்சு. ஒரு எட்டு போய் குடுத்துட்டு வந்துடுயா.. இல்லைனா ராத்திரிக்கு ஒரு மூச்சு பாடி தீத்திரும்..” “வரவர பொண்ணாத்தாக்கு ஓவர் வாய் ஆகிப் போச்சுப்பா.. இதுக்கொசரம் நான் வெய்யில்ல அலையனுமா..” “வயசானவங்க தம்பி.. ஏதோ முடியாத வேலைக்கு நம்ம கிட்ட கேக்குது.. நீ நம்ம கார்லயே போய்ட்டு வந்துடுயா “என்று ராகவன் சொல்லவும், “சரி சரி குடுங்கப்பா.. நான் போய்ட்டு வரேன் “என்றவன் அவரிடம் வெத்தலையை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான். “இந்தா தாமர தம்பிக்கு ஒரு போனு போட்டு கேளு.. மத்தியானம் வீட்டுக்கு வரேன்னு சொன்னவன இன்னும் காணோம்..இந்த வெத்தலைய போடாம வாயெல்லாம் சவசவன்னு கிடக்கு.. ஊரே சுத்தரானுவ, இந்த கிழவிக்கு கொண்டாந்து குடுக்க மட்டும் நேரம்...