இடுகைகள்

யாருமில்லா தனியரங்கில் -16

படம்
யாருமில்லா -16 நிவனின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நிலா சடாரென கதவு திறக்கும் வேகத்தில் எழுந்து அமர்ந்தாள். அப்போது உள்ளே வேகமாய் வந்த மொழி நிலாவைப் பார்த்ததும் சற்று தடுமாறிய பின் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அதற்கும் மேல் தாங்க முடியாதவளாய் உடைந்து அழ வெளியிலிருந்து அவளின் அழுகை சத்தத்தை கேட்ட நிலா அவளை தேற்றும் வழியன்றி தவித்தாள். மீண்டும் மீண்டும் இவளையே ஏன் உடைக்கிறாய் என கடவுளின் மீதே கோவம் வந்தது. அவளின் அழுகைக்கு காரணமான அபியின் மீது ஆத்திரம் மிகுந்தது. ஒன்றும் ஒன்றும் இரண்டென கணக்கிட அவளுக்கு நொடி நேரம் தான் பிடித்தது. 'இவனுக்கு என்ன தைரியமிருந்தால் மொழியை அழ வைத்திருப்பான் ' என அபியின் மீது கோவம் கொண்டு தான் இப்படி வந்து அறைந்ததே. ஆனால் பதிலுக்கு தன் காலை அணைத்துக் கொண்டு கதறிய பொழுது முற்றிலும் திகைத்துத் தான் போனாள். 'ஐயோ இவனின் உடல்நிலைக்கு இந்த அழுகை நல்லதில்லையே 'பதறியது அவள் மனம். அபியை மெல்ல பிரித்து விட்டு அவனைப் போலவே மண்டியிட்டு அமர்ந்தாள். அபியோ முகத்தை மூடி விசும்பிக் கொண்டிருந்தான். இவள் அமர்ந்ததும் மடியில் முகத்தை புதைத்துக் கொண...

யாருமில்லா தனியரங்கில் -15

படம்
யாருமில்லா -15 அபிமன்யு மருத்துவமனையிலிருந்த அதே நேரம் நிவனை தூங்க வைத்தவாறே அவனின் அருகில் படுத்திருந்தாள் மென்மொழி. உள்ளத்தின் வருத்தங்களை உதடுகள் வெளிப்படுத்தி விடா வண்ணம் இறுகி இணைந்து கிடந்தது அவளிதழ்கள். தனிமையான உள்ளத்து அரங்கில் சமீப காலமாய் உணர்ந்து கொண்டிருந்த ஒருவனது நேசக் குரல் இன்று அதி கனமாய் கானம் இசைத்து துடிக்க வைத்தது. 'மனு…' பெரும் கேவலொன்று அவளிடமிருந்து வெளிப்படத் துடிக்க, நிவனின் இருபுறமும் தலையணையை வைத்து விட்டு அறையோடு இணைந்திருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். ஷவரை முழுதாய் திறந்து விட்டவள் அப்படியே அமர்ந்து விட்டாள் அதனடியில். இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொள்ள விரல் இடுக்குகளில் வழிந்தது கண்ணீர். "நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா மனு" தேம்பல்களின் இடையினில் விளம்பரமாய் இடைவிடாது புலம்பிக் கொண்டிருந்தாள். அவளை தொப்பலாய் நனைத்துச் சென்றிருந்த நீரினைப் போலவே நேரமும் தீர்ந்து கொண்டிருந்தது கணக்குவழக்கின்றி. அழுகையும் தேம்பலும் மெல்ல குறைந்து முற்றிலுமாய் நின்றிருக்க இமை மூடி அமர்ந்திருந்த மொழியின் மனதில் மனு மட்டுமே மிச்சமிருந்...

யாருமில்லா தனியரங்கில் -14

படம்
யாருமில்லா -14 "நம்ம மொழிக்கு ஒரு வரன் வந்திருக்கு ரேவதி"என்றார் பொன்னாத்தாள். "நல்ல இடமா பெரியம்மா " "அதெல்லாம் அருமையான இடம் தான். எங்க சின்னாத்தா சொந்தம். பையன நான் பாத்துருக்கேன். ரொம்ப தங்கமான குணம். அவன் மொத பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு பையனை விரும்பியிருக்கு. அவிங்க அப்பா அம்மா கட்டாய படுத்தி அந்த புள்ளைய கண்ணாலம் பண்ணி வச்சுருக்காங்க. தாலி கட்டி மறுநாளே அந்த புள்ள இவன் கிட்ட உண்மைய சொல்லிடுச்சு. இவன் அந்த புள்ள விரும்புன பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சுட்டான். இப்ப ஒரு ஆறு மாசம் மின்னாடி முறப்படி விவாகரத்தும் வாங்கிட்டான்." "இப்படியுங்கூடவா இருக்காங்க?" ஆச்சிரியப்பட்டார் ரேவதி. "அந்த பையன் குணம் அப்பிடி ரேவதி. ஆனா இதுல கெட்ட விஷயம் என்னன்னா அந்த பையன் ரெண்டாந்தாராம்னு இப்ப ஒருத்தரும் பொண்ணு தர மாட்டிங்குறாங்க." என்று தாமரை சொல்ல, "அட கடவுளே " என வருத்தப் பட்டார் ரேவதி. "போன வாரம் ஒரு விசேஷத்துல அவங்க அப்பா அம்மாவை பார்த்தேன் ரேவதி. அவங்க நிலைமைய சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க. நம்ம பக்கம் பொண்...

யாருமில்லா தனியரங்கில் -13

படம்
அத்தியாயம் -13 சுடும் வெய்யிலின் தீரத்தில் நெற்றியில் பொடித்த வியர்வை துளிகளை துப்பட்டாவில் துடைத்தபடி ஏற்கனவே எண்ணி வைக்கப் பட்டிருந்த முட்டைகளை தன் திருப்திக்காக ஒரு முறை எண்ணிக் கொண்டிருந்த மொழி அந்நேரத்தில் வாசலில் கேட்ட கார் சத்தத்தை கேட்டுவிட்டு, 'வேலு முட்டை எடுத்துட்டு போக வந்துட்டான் போல 'என நினைத்தவள் வேகமாய் முட்டைகளை கணக்கிட்டு முடிக்க, "முட்டையெல்லாம் எடுத்து வச்சாச்சா ராணிக்கா "என்று பண்ணையில் வேலை செய்யும் ராணி என்ற பெண்மணியிடம் அபி பேசும் குரல் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தாள். ராணியிடம் பேசியவாறே உள்ளே வந்து கொண்டிருந்தவன் பார்வையில் தன்னை எட்டிப் பார்த்த மொழி படவும் நடந்து கொண்டிருந்தவன் கால்கள் தன்னால் நின்றது. 'ஆகா! யாரு கண்ணுல படவே கூடாதுன்னு நினைச்சேனோ அங்கேயே வந்து கோர்த்து விட்டுருக்கியே முருகா 'என்று எண்ணியவாறு, கண்ணாமூச்சி ஆட்டத்தின் நிறைவில் அகப்பட்ட சிறுவன் நிலையில் கைகளை பிசைந்தவன்,மொழி தன்னை நோக்கி வருவது கண்டு  "அக்கா இருங்க ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன் " என்றவாறு கார் நிறுத்துமிடம் நோக்கி ஓடினான். அவன் திடுமெ...

யாருமில்லா தனியரங்கில் -12

படம்
அத்தியாயம் -12 சுழலும் மந்திரக் கொம்பொன்று நம்மை சுழற்றி வைக்கும் நிலையொன்றில் என்ன செய்ய முடியும்? மந்திரத்தில் மயங்கிக் கிடைப்பதைத் தவிர. காதலும் அப்படித்தான். அது ஒரு மந்திரக் கோல். நம்மை நோக்கி அது நீளும் போது காற்றுக்கு அசையும் இறகு போல நம் மனம் வெகு இம்சையாய் அதன் போக்கில் ஆட ஆரம்பித்து விடும். அதை கட்டி வைத்தால் பிய்ந்து போவது நம் மனம் தானே தவிர காதலல்ல. பருத்திப் பூவின் மென் இதயம் நேச நீரில் மூழ்கி ஊறி கிடக்கிறது. அதை காய வைக்க இடைவெளி என்னும் வெயிலில் உலர்த்த சறுகானது என்னவோ ஆணவன் இதயமே. அன்றைய இரவின் மீதியில் நிகழ்ந்த நிகழ்வுகளின் எதிர் வினைகளை அஞ்சி அபிமன்யூ அவர்களின் உணவகமான 'அயினி நற்சுவை'யில் தனது வேலையை பிஸியாக்கிக் கொண்டதில் மொழியின் கண்ணிலேயே படாமல் போனான். மென்மொழியோ அன்றைய நிகழ்வை கனவோ நனவோ என்ற குழப்பத்தில் அபியிடம் பேசக் காத்திருந்தாள். கற்பனையோ நிஜமோ அதை அவள் மனம் எந்த வித எதிர்ப்புமின்றி அவனில் இசைந்து போனதை நினைத்து பெண்ணவளுக்கு ஒரு வித படபடப்பும் நடுக்கமுமாய் உள்ளூற உராய்ந்து கொண்டிருந்தது நேசத்தின் தடுமாறல். நான் அவனைக் காதலிக்கின்றேனா? மென...

யாருமில்லா தனியரங்கில் -11

படம்
அத்தியாயம் -11 மழையும் இருட்டுமாய் அந்நேரம் வாகனங்களின் இரைச்சல் ஒலியிலும் முகப்பு விளக்கின் வெளிச்சத்திலும் நிறைந்திருந்தது நொய்யல் சாலை. அந்த வழியாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வரும் டிராக்டர்களின் வரத்து அதிகமிருப்பதால் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும்.மழை வேறு இடைவிடாமல் பொழிந்து கொண்டிருக்க வாகனத்தை ஓட்டவே சிரமப் பட்டனர். ஆனால் அதில் விதி விலக்காய் நெஞ்சத்தில் துள்ளும் உற்சாகத்தின் விளிம்பில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் வினோத். அவன் பின்னால் அமர்ந்து கொண்டு வந்த அபிமன்யு தான் புலம்பிக் கொண்டே வந்தான். “ஏன் அண்ணாத்த மழை தான் இப்படி ஊத்துதே, கொஞ்ச நேரம் நின்னுட்டு மழை நின்ன பிறகு போனா தான் என்ன?” முகத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே கேட்டான் அபிமன்யு. “மொழி தனியா இருப்பா டா.” “அதுக்கு தான் சொன்னேன் மெய்மாவ ரேவதி அத்தை வீட்ல விட்டுட்டு வரலாம்னு “ “ப்ச் சீக்கிரம் வந்துரலாம்னு நினச்சேன். அந்தாளு லிஸ்ட் கொடுக்கறேன் மெனு கொடுக்கறேன்னு இழுத்தடிச்சுட்டான்”வந்த கடுப்பிற்கு வாடிக்கையாளரை தாளித்தான். “சரி சரி பொலம்பாத. அந்த ஹெல்மெட்டயாச்சும் போட்டுட்டு ஓட...

யாருமில்லா தனியரங்கில் -10

படம்
அத்தியாயம் -10 சிறுவர் பூங்காவின் சுற்றுச்சுவர் அருகில் வளர்ந்திருந்த ஒரு அடர்ந்த மரத்தினடியில் கிடந்த இருக்கையில் வந்தமர்ந்தான் அபிமன்யு. அவன் எண்ணங்கள் பயணித்த திசைகளில் ஆர அமர வேடிக்கை பார்த்திட தனிமை தேடியலைந்தது அவனுள்ளம். மனைவி என்ற பதமே மந்திரப்பந்தாய் மொழியொருத்தியையே சுற்றி வந்தது. நிலாவும் அருணும் பேசிய கணத்திலேயே அவன் எண்ணச் சிதறல்கள் மொழியை மையப்படுத்தி கற்பனைங்களுக்கு வண்ணம் தீட்டி பேசிய வார்த்தைகளை சித்திரங்களாக்கி ரசித்து விட்டிருந்தது க்ஷண பொழுதுக்குள். 'அவள் வினோத்தின் மென்மொழி' என்ற வார்த்தைகள் காற்றில் ரீங்காரமிட்டுச் செல்ல விரக்தியின் முத்தாய்ப்பாய் அவன் வார்த்தைகளை விட்டுவிட்டு வந்துவிட்டான் அவர்களிடமிருந்து. இரு கைகளாலும் முகம் மூடி அமர்ந்திருந்தவன் அருகில் வந்தமர்ந்தாள் மொழி. அவளின் அருகாமை சிணுங்கல்கள் அவனுக்கு எப்பொழுதுமே அக்கினி பிரவேசம் தான்.உள்ளத்தின் தளர்வுகள் உடலிலும் வந்து விடுமோ என அஞ்சியே இறுக்கிக் கொண்டான் இதயத்தை. அவன் இதயத்தை நொறுக்கிச் செல்லும் சோதனையாய் அவன் தோள் மீது ஆதரவாய் கரம் பதித்தாள் மொழி. "இதென்ன அபி இவ்வளவு சின்ன வ...

யாருமில்லா தனியரங்கில் -9

படம்
அத்தியாயம் -9 முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… மனதோரம் ஒரு காயம்… உன்னை எண்ணாத நாள் இல்லையே… நானாக நானும் இல்லையே… வழி எங்கும் பல பிம்பம்… அதில் நான் சாய தோள் இல்லையே… உன் போல யாரும் இல்லையே… பாடல் காரில் இசைத்துக் கொண்டிருக்க அதனோடு சேர்ந்து பாடிக் கொண்டிருந்தனர் அருணும் நிலாவும். பாடல் வரிகள் என்னவோ அவனுக்கென்றே எழுதி வைத்தது போலிருந்தது அபிமன்யுவிற்கு. அவனும் மெல்ல இதழ்களுக்குள் வார்த்தைகளை ரசித்து முனுமுனுத்துக் கொண்டிருந்தான். அருண் அபி பக்கத்தில் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க பின்னால் நிலாவின் மடியில் ஆரலி அமர்ந்திருக்க மொழியின் மடியில் கவின் அமர்ந்திருந்தான். முன்புறக் கண்ணாடியில் தெரிந்த மொழியின் முகத்தை அவ்வப்போது பார்த்தவாறே இதழைசைத்துக் கொண்டிருந்தான். தூர தேசத்தில்… தொலைந்தாயோ கண்மணி… உனை தேடி கண்டதும்… என் கண்ணெல்லாம் மின்மினி… பின்னோக்கி காலம் போகும் எனில்… உன் மன்னிப்பை கூறுவேன்… கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்… பிழை எல்லாமே கலைவேன்… பின்பாதி வரிகளை மொழியை பார்த்தவாறே சற்று சத்தமாக பாட, அதுவரை வெளியே வேடிக்கை பார்த்துக...

யாருமில்லா தனியரங்கில் -8

அத்தியாயம் -8 நிலாவிடமிருந்து தான் விலகி விட்டோம் என்று நினைத்து வருந்தினான் அபிமன்யு. இந்த இடைவெளியை சரி செய்ய எங்கேயாவது வெளியில் அழைத்துச் சென்று பேசவேண்டும் என எண்ணி கைபேசியில் அவளுக்கு அழைத்தான். சில நேரங்கள் கழித்து அழைப்பு ஏற்கப்பட, "டி குட்ட மூன் எங்கயாச்சும் வெளியே போய்ட்டு வரலாமா? ஃப்ரெண்ட்ஷிப் டே செலிபிரேட் பண்ண சிவா தியேட்டர் போலாமா?"என்று எடுத்த எடுப்பில் அபி கேட்க,பதிலாக வந்த  " எப்படி இருக்க அபி? "என்ற மொழியின் குரலில் அப்படியே சமைந்து விட்டான். பதில் பேச வார்த்தைகள் வெளி வர மறுத்து இதழ்களுக்குள் பதுங்கி கிடக்க, நெஞ்சுக்கூட்டுக்குள் பொதிந்து கிடந்த இதயத்தின் தாளம் தப்பி ஒலிக்க ஆரம்பித்தது.எத்தனை நாட்கள் கழித்து அவள் குரலைக் கேட்கிறான். அக்கறையும் மென்மையுமாய் அவள் குரல் அவனை நெகிழ்த்து உயிர் தீண்டியது. இடைவெளியின் இளைப்பாறல்களை அவள் கரங்களுக்குள் இறக்கி விட தவித்தது அவனுள்ளம். 'அணுவுக்கும் இடமில்லா ஆலிங்கனம் அவளோடு இந்த கணமே வேண்டுமே 'அடம் பிடித்தது அவன் உணர்வுகள். "ஹலோ அபி.. லைன்ல இருக்கியா?" இவனின் அமைதியில் அவள் கேட்க அவன் இதழசைத்...

யாருமில்லா தனியரங்கில் -7

அத்தியாயம் -7 அபிமன்யு வந்த மறுநாள் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை. உலக நண்பர்கள் தினம். காலையில் எழுந்த அபிமன்யு வெகு ஆவலாய் வாட்சப் ஸ்டேட்டஸ் பார்க்க முகம் பியூஸ் போன பல்பானது.அவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஞாபகம் வந்து போனது. வெண்ணிலா வீதியுலா நடத்தும் இரவின் நிறைவிற்கு பின் வெண்கதிரோன் வீர உலா நிகழும் பகல் பிறந்து இரண்டு மணி நேரம் கடந்த நிலையிலும் படுக்கையை விட்டு நகராமல் சோம்பலாய் கைபேசியை நோட்ட மிட்டுக் கொண்டிருந்த அபிமன்யு சட்டென எழுந்து அமர்ந்தான். அதுவரை அமைதியாய் இருந்த அவனது கைபேசி அவன் சத்தத்தை கூட்டி வைத்ததில் அலறிக்கொண்டு பாடியது. ‘நட்புதான் சொத்து நமக்கு.......... நட்பு தான் சொத்து நமக்கு...........’ என் நண்பன் போட்ட சோறு.... நிதமும் தின்னேன் பாரு.....’ நட்பின் வலிமையை முழங்கும் விதமாய் பாடல் வரிகளும் அதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களுமாய் வாட்சப் ஸ்டேட்டஸில் ஓடிக்கொண்டிருந்து. “அச்சோ மச்சி பிச்சுட்டாளே!” என்று வாய் விட்டே சொன்னவன் உடனடி செயலாய் அவள் எண்ணிற்கு அழைத்தான்.சில நிமிட காத்திருப்பிற்கு பின் அழைப்பு ஏற்கப்பட எதிற்முனையின் ...

யாருமில்லா தனியரங்கில் -6

 அத்தியாயம் 6 நிலா கேட்ட கேள்வியில் முதலில் திகைத்தாலும் விரைவில் தன்னை சுதாரித்துக் கொண்ட அபிமன்யு, “உன் கூட இருக்க வரைக்கும் அப்பிடி எந்த ஒரு நல்ல விஷயமும் எனக்கு நடக்காது நிலா “என்று சொல்ல,அவள் கடுப்பாகி “இல்லைனா மட்டும் சார் அப்பிடியே நாலு ஃபிகர லவ் பண்ணி நாப்பது நாள் டேட்டிங் போயிருப்ப.”என்க “ஒத்த ஃபிகருக்கு வக்கத்து கிடக்குறேன். இதுல நாலு ஃபிகாரம்.நாப்பது டேட்டிங்காம். நடக்குற கதையா இது. நானே பேசாம கைலாசா போயிரலாம்னு நினைச்சுட்டு இருக்கேன் “ “மொத அத செய் “என்றிருந்தாள். ‘இவள என்ன சொல்லி அனுப்பினா, என்ன பண்ணிட்டு இருக்கா… சிங்காரி’என பல்லைக் கடித்தான் அன்புச் செழியன். பின் கடுப்புடன் உள்ளே சென்றான். “டேய் அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணிட்டு வந்துட்டு தூங்காம என்ன வெட்டி அரட்ட அடிச்சிட்டு இருக்க “என்று அபியை கடிந்து விட்டு, “நீ கிளம்பலையா இன்னும் “என்று நிலாவிடம் எகிற, “நீங்க தான மாமா..”என்று அவள் ஆரம்பிக்கும் போதே அவள் தலையில் கொட்டி, “எந்திரிச்சி போடி “என்று அவளை விரட்டினான். ‘இவரே பேச சொல்லிட்டு இப்ப வந்து விரட்டுறத பாரு பிஎம்’ வலித்த தலையை தேய்த்துக் கொண்டே அன்புவை முறைத்து விட...